துறை வரலாறு


பழம்பெருமையும் புதுப்பொலிவும் ஒருங்கே பெற்ற தாய்த்தமிழ் மொழியை, உயர் கல்வியாகக் கற்பிக்கும் நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டு தமிழ்த்துறை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொழி இலக்கியம், கலை, பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பிக்கின்றது. மாணவர்களின் கலை சார் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது. கல்லூரி மாணவிகளின் படைப்புத்திறன்களை மேம்படுத்தும் வகையில் மேடைபேச்சு, கவிதை, கதை, கட்டுரை, வினாடி வினா, விவாத மேடை, மென்திறன் மேம்பாடு பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோக்கம்

  • மொழி மற்றும் இலக்கியப் படிப்பு மாணவிகளின் மொழித்திறனை வளர்த்து அவர்களின் முழுமையான ஆளுமையை மேம்படுத்துதல்.
  • சமூகத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு இலக்கிய அறிவைத் தூண்டுதல்.
  • ஆளுமை, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பித்தல்.
  • நவீன அறிவியலையும், சமூக அசைவியக்கத்தையும் அறம் பிறவாமல் கற்பிக்கச்செய்தல் .
  • தகவல் தொடர்பு மற்றும் படைப்பாற்றல் திறன்களை வளர்க்க மாணவிகளை மேம்படுத்துதல்.

பணி

  • முசிறி சுற்று வட்டார கிராமப்புற ஏழை மாணவிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினர் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் சேர்ந்து பயில முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்குத் தரமான இலக்கியக் கல்வியைக் கொடுத்துத் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.

நறுமுகை மன்றம்

எம் தமிழ்த்துறையில் பேராசிரியர்கள், மாணவிகளை உள்ளடக்கிய ஓர் இலக்கிய முற்றும் செயல்படுகிறது. மாதம் ஒரு முறை கூடும் இக்கூட்டத்தில் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவிதை, கட்டுரை, நாடகம், பேச்சு, பாட்டு, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்தல். ஏதேனும் ஒரு புதிய படைப்பிலக்கிய, திறனாய்வு நூலைப் பேராசிரியர் ஒருவர் அறிமுகம் செய்து வைத்து, அது குறித்த விமர்சனங்களை அனைவரும் முன் வைப்பர். ஒரே நூலைப் பற்றிய பல்வேறு பார்வைகள் வெளிப்படுவது அறிவுக்கு விருந்தாகும். கணினி அறிவைப் பெரும் வகையில் குறும்படம், வார்த்தை விளையாட்டு ஆகியவை இம்மன்றத்தில் நடைபெறும்.

வேலை வாய்ப்பு

  • உலக அளவில் வேலை வாய்ப்பு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்மொழி பயிற்றுவிக்கும் பணி வாய்ப்புகள்.
  • எழுத்தாளர், மேடை பேச்சாளர், பாடலாசிரியர் என பணிபுரியும் வாய்ப்பு
  • தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணிவாய்ப்பு
  • அரசு தேர்வுகளுக்குப் பயிற்றுனராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு
  • மென்பொருள் கட்டமைப்பு பணி வாய்ப்பு
  • அரசுப்போட்டித் தேர்வுகளான TNPSC, TRB , TNTET, RRB, UPSC துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு